வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் அடையாளம் தெரியாத உடல்கள் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது மேப்பாடி கிராமத்தில் 74 அடையாளம் தெரியாத உடல்கள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளனர். இதற்காக கல்பெட்டா, வைத்திரி, முட்டில், கணியம்பட்டா, தொண்டர் நாடு,முள்ளம் கொள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள மயானங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.