வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 400 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, மீட்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. நிலச்சரிவு தொடர்பாக அவசர உதவிக்கு 9656938689, 8086010833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்