வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 98 பேரை காணவில்லை என்று கேரளா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த 128க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 400 குடும்பங்கள் சிக்கித் தவித்து வருகின்றன.