வயநாட்டில் நிலச்சரிவால் வீடுகளை இழந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பாக வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் இப்படி ஒரு சோகத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றார். பாதிப்புகள் குறித்து ஊராட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும் வீடுகள் கட்டித் தர முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.