வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரளாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 282 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அரசின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் மத்திய அரசிடம் கூடுதல் நிதி கோரும் வகையிலும் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.