வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார். இந்த தொகை ராகுல் காந்தி மூலமாக கேரளா முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு காசோலையாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 80 பேர் கொண்ட மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.