வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மேலும் ஒரு தமிழர் உயிரிழந்துள்ளார். சூரல்மலையில் உள்ள கோயிலில் பூசாரியாக இருந்த, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் (60) என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து கட்டட வேலைக்குச் சென்ற காளிதாஸ் என்பவர் உயிரிழந்த செய்தி வெளியானது. இதுவரை மொத்தம் 123 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.