வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் 20 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளனர். அவர்களது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், இந்த கடினமான சூழலில் ஒருவருக்கொருவர் துணையாக நிற்க வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து அனைத்தையும் மீண்டும் உருவாக்குவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.