வயநாடு பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரளா மாநிலங்களவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநிலங்களவையில் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து கேரளா நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இந்த பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இது குறித்து கேரள முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.