நிலச்சரிவால் பேரழிவை சந்தித்துள்ள வயநாட்டு மக்களுக்கு உதவும் வகையில் மூன்று நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. வேலிடிட்டி முடிந்த வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாட்கள் கூடுதல் வேலிடிட்டி, 1 ஜி பி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது. போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தையும் 30 நாட்கள் நீட்டித்துள்ளது.