வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 45 பேர் உயிரிழந்த நிலையில், மண்ணில் புதையுண்டவர்களை மீட்பதில் பல்வேறு சிக்கல் எழுந்துள்ளது. பாலம் உடைந்துள்ளதாலும், மழை தொடர்வதாலும் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விமானப்படை ஹெலிகாப்டர்கள் அங்கு சென்றடைந்தபோதும் மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல், அங்கிருந்து ஹெலிகாப்டர்கள் மீண்டும் கோழிக்கோட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.