வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெண் ஒருவர் உட்பட 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 27 பேர் மீட்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிப்பில் சிக்கி உள்ளதால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. சூரல்மலை மற்றும் முண்டகை அருகே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இது தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.