கனடாவின் 157 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ராணுவ தளபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ராணுவ தளபதியாக மூத்த பெண் ராணுவ அதிகாரியான ஜென்னி கரிக்னனை அந்நாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார். ராணுவ சேவையில் 35 ஆண்டுகால அனுபவம் கொண்ட அவர் 2019 -2020 ஆம் ஆண்டு வரை நேட்டோ ஈராக் மிஷனையும், ஆப்கான் மற்றும் சிரியாவில் கனடா படைகளையும் தலைமை ஏற்று வழி நடத்தியுள்ளார்.