மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட வைப்பு நிதிகளுக்கு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லாமல் ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை 7.1% வட்டி வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த வட்டி விகிதம் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.