வறுமையை ஒழித்த முதல் மாநிலம் தமிழ்நாடு என்று நிதி ஆயோக் அறிக்கையை குறிப்பிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து கதெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், பாஜகவின் சர்வாதிகார ஆட்சி முறைக்கு நேர் எதிராக, சமூக நீதி, சுற்றுச்சூழல் மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் அரசு கொடுக்கும் முக்கியத்துவம் மற்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வை கொண்ட மக்கள் நல திட்டங்களால் இந்தியாவிலேயே வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறியிருக்கிறது என கூறியுள்ளார்.