வாசனை திரவியங்கள் பிடிக்காதவர்கள் மிகக்குறைவு தான் . சிலர் அருகில் சென்றாலே அதிக நறுமணம் வீசும்.
இருந்தாலும் வாசனை திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களாலும் மனநலப் பிரச்னைகள் ஏற்படுவதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. வாசனை திரவியங்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் தோல் நோய்கள், மூக்கு, கண், தொண்டை வலி, மறதி, சுவாச நோய்கள் போன்றவை ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.