வாடகை வீட்டில் வசிப்போருக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சொந்த வீடு கட்ட அளிக்கப்படும் கடனை 18 லட்சம் ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது மானியத்துடன் 12 லட்சம் ரூபாய் வரை கடனாக மத்திய அரசு வழங்கி வரும் நிலையில் இதனை 18 லட்சமாக அதிகரிப்பது குறித்து அறிவிப்பு விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகும் பொது பட்ஜெட்டில் வெளியாகும் என கூறப்படுகிறது.