வாட்ஸ் அப்பில் மெசேஜ் மொழிபெயர்ப்பு செய்யும் அம்சம் விரைவில் வர உள்ளது. இதன் மூலம் சாட் பக்கத்தில் வரும் செய்திகளை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கலாம். இது கூகுள் லைவ் ட்ரான்ஸ்லேஷன் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் என Wabeta Info தெரிவித்துள்ளது. இந்த அம்சத்தை செயல்படுத்த நீங்கள் மொழித் தொகுப்பை பதிவிறக்கம் செய்து மொழிபெயர்ப்பு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.