கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால், வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.