தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்த நிலையில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகரும் இசையமைப்பாளருமான சதீஷ் நாதன், வருகின்ற ஜூன் 21ஆம் தேதி மாலை 6:00 மணி அளவில் வா தளபதி வா என்ற தலைப்பில் தயாரான பாடலை ரிலீஸ் செய்ய உள்ளார். இந்தப் பாடலுக்கு திரைப்பட பாடல் ஆசிரியர் கருணாகரன் வரிகள் எழுதியுள்ளார். இது குறித்த போஸ்டரும் வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.