விக்கிரவாண்டி தொகுதியில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 1.07 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அத்துடன் 27 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 43 வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.