விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாதக ஆகிய கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி ஏற்றுள்ளார். மொத்தம் 55 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதே நேரம், 35 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.