விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. மக்களவை தேர்தலில் ஓட்டு போட்ட வாக்காளர்கள் பலரின் கையில் மை அழியாமல் உள்ளது நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் இடதுகை ஆள்காட்டி விரலில் மை இருந்தால் அதற்கு மாற்றாக இடதுகை நடு விரலில் மை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.