திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்தபின் அக்கட்சி போட்டியிடப் போகும் முதல் தேர்தல் இதுவாகும்.ஆகையால் தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். நிரந்தர சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கவும் கட்சி திட்டமிட்டுள்ளது.
இதனிடையே இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில் அன்னியூர் சிவா போட்டி என திமுக தலைமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..