விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் மாவட்ட கமிட்டி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதன் மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமையிலான மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. இங்கு வருகின்ற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.