விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் இந்தத் தொகுதிக்குட்பட்ட 90 இடங்களில் 1360 வாக்காளர்களிடம் பேராசிரியர் டாக்டர் ராஜநாயகம் தலைமையில் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அந்த கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி திமுக 56.56% பெற்று வெற்றி பெறும் என்றும், பாமக 37.5% பெற்று இரண்டாம் இடத்தையும், நாம் தமிழர் கட்சிக்கு 4% பெற்று 3ம் இடத்தையும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது, பிற வேட்பாளர்கள் 0.4% பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.