விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, எதிர்த்து போட்டியிட்ட பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை விட கூடுதலாக 67,065 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக 1,23,095, பாமக – 56,030, நாதக – 10,020 வாக்குகள் பெற்றுள்ளன.