விக்கிரவாண்டி தொகுதியில் வருகிற 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடப்பதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அங்கு 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு வெளிநபர்கள் நுழையவும், தங்கியிருக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் பிரசாரம் உள்ளிட்டவை மேற்கொள்ளக் கூடாது. இதை மீறினால் 2 ஆண்டு சிறை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது