விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அவர், விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம், அமெரிக்க ராணுவ ரகசியத்தை வெளியிட்டதால் சர்வதேச அளவில் பிரபலமானார். இதையடுத்து அவர் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கைதாவதை தவிர்க்க, லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். 2019இல் ஈக்வடார் அரசு தனது ஆதரவை வாபஸ் பெற்றதால், அவர் கைதானார்.