பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி மேனன், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள “தங்கலான்” படத்திற்கு தணிக்கைக்குழு ‘U/ A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரில், விக்ரமின் கெட் அப், ஜி.வி.பிரகாஷின் இசை, ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் என அனைத்தும் மிரட்டலாக இருந்தது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் ஆக.15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.