அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். ₹100 கோடி மதிப்பிலான சொத்துகளை போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில் கைதாவதில் இருந்து தப்பிக்க அவர் தலைமறைவானார். இதையடுத்து, அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கேரளாவில் பதுங்கி உள்ளதாக கிடைத்தத் தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.