19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஜய் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் பேசிய விஜய், மாணவர்கள் மகிழ்ச்சியாக படிக்க வேண்டும் என்றும், நிறைய வாய்ப்புகள் கொட்டி கிடப்பதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாணவிகள் சிலர் அவருக்கு பூக்கள் கொடுத்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.