விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜூ, “நான் விஜய்யின் அபிமானி இல்லை.
எம்.ஜி.ஆர் போல திரைத்துறையில் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவு செய்வதற்கு நடிகர் விஜய் நினைக்கிறார். அவருடைய முயற்சியை நான் பாராட்டுகிறேன். கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார் என கூறியுள்ளார்.