விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பைப் பெற்ற அவர் தன்னை குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி விடக்கூடாது என்றார். தமிழ்நாட்டிற்கு புதிய அரசியல் கட்சி ஒன்று தேவை இல்லை என்ற அவர், அரசியல் கட்சி ஆரம்பிப்பதன் மூலம் தன்னுடைய ரசிகர்களாக எல்லா கட்சியிலும் உள்ளவர்களை விஜய் கண்டிப்பாக இழப்பார் என்றும் கூறியுள்ளார்.