கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், மகாராஜா படத்தை ரசித்தேன். அருமையான திரைக்கதை. விஜய் சேதுபதி, நடராஜ், அனுராக் காசிப் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பட குழுவுக்கு வாழ்த்து என பாராட்டியுள்ளார்.