சென்னை நீலாங்கரையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவன் கையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை அழைத்து வந்து சாகசம் செய்ய வைப்பதாக கூறி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது. . கையில் தீ பற்றி எரிந்த நிலையில் வலி தாங்க முடியாமல் சிறுவன் அலறி துடித்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.