இந்திய பங்குச் சந்தையில் மூன்று ஆண்டுகள் வர்த்தகம் செய்ய விஜய் மல்லையாவுக்கு SEBI தடை விதித்துள்ளது. 2006-2008 காலகட்டத்தில் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் இருந்து பங்கு சந்தையில் (பங்கு & பத்திரங்கள்) சட்டவிரோதமாக அவர், முதலீடு செய்ததாக புகார் எழுந்தது. அதனை விசாரித்த SEBI, அவர் முறைகேடுகள் செய்ததை உறுதி செய்தது. வங்கிகளில் ₹9,000 கோடி மோசடி செய்த அவர் பிரிட்டனில் பதுங்கியிருக்கிறார்.