கடந்த 2015 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தை மறு உருவாக்கம் செய்வதற்காக வெடி பொருட்களை கடத்திய வழக்கில், இலங்கையை சேர்ந்த புலிகள் ஆதரவாளர் ஸ்ரீரஞ்சன் (47) என்பவருக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் 5ஆண்டு சிறை தண்டனை விதித்தது. நேற்று (ஜுலை 18) ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்தது. இதில் ஸ்ரீரஞ்சனுக்கு, ஐந்தாண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி குமரகுரு தீர்ப்பளித்தார்.