மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 17 ஆயிரத்து 727 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 27 இன்று கடைசி நாள். ssc சார்பில் நடத்தப்படும் CGL 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். முதல் நிலை கணினி வழி தேர்வு செப்டம்பர் மற்றும் அக்டோபரிலும் இரண்டாம் நிலை கணினி வழி தேர்வு டிசம்பரிலும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு https://ssc.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.