விண்வெளி தொழில் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய மற்றும் விரிவாக்க தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், தூத்துக்குடி மாவட்டம் (Space bay) விண்வெளி தொழில் விரிவாக்க மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.