தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலை கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஆலை அமைக்க உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வின்பாஸ்ட் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் உருவாகும் இந்த ஆலை 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளது.