கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் உள்ள பல் மருத்துவமனைக்கு அருகே ஒரு வீட்டிற்கு அடிக்கடி ஆண்கள் வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்று போலீசார் சோதனை செய்தபோது இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 35 வயது பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தர்மபுரி கம்பைநல்லூரை சேர்ந்த சக்தி மற்றும் அப்துல் ரகுமான் என்ற இரண்டு இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.