வயநாடு செல்லும் வழியில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற கார் விபத்தில் சிக்கியது. நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டிற்கு நேரில் சென்று பார்வையிடுவதற்காக இன்று காலை அவர் சென்று கொண்டிருந்தபோது மஞ்சேரி அருகே அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் மீது மோது விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.