விமானம், விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது போன்ற மிரட்டல்களில் பெரும்பாலானவை வதந்தியாக தான் இருக்கிறது. இதனால் விமானங்கள், பயணிகள் மற்றும் விமான நிலையங்களை சோதிக்கப்படுவதால் விமான சேவை பாதிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து பொய் மிரட்டல் விடுப்போருக்கு விமானத்தில் பயணிக்க 5 ஆண்டு தடை விதிக்க விமான போக்குவரத்து துறை ஆலோசித்து வருகிறது.