விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி, இளம் வீரர் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் 6 -2, 6 -2, 7-6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி, தொடர்ந்து 2வது முறையாக அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம், ரோஜர் பெடரருக்கு பிறகு 21 வயதில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.