இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் 2024 டி20 உலக கோப்பையில் முதல் 3 போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அவரது பேட்டிங் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் விராட் கோலியின் பேட்டிங் திறன் குறித்து கவலைப்பட தேவையில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார். இப்படியான ஒரு சூழலில் விராட் இருப்பது நல்லது தான் என குறிப்பிட்ட அவர், இந்த சூழல் அவரை சிறப்பாக விளையாடத் தூண்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இந்தியனில் ஆல்ரவுண்டர்கள் நிரம்பியுள்ளதால் போட்டிக்கு ஏற்ப வீரர்கள் தேர்வு செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.