விருச்சிக ராசி அன்பர்கள்
கடந்த இரண்டு நாட்களாக கடினப்பட்டது கஷ்டப்பட்டதெல்லாம் கண்டிப்பாக மாறும். எல்லா விதத்திலும் ஏற்றங்கள் வருவதற்கான சூழ்நிலை இருக்கிறது. முயற்சி பண்ணுங்கள் திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். மூடநம்பிக்கையில் கவனம் செலுத்த வேண்டாம். இதனால் பண இழப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் . நல்லதே நடக்கும் கவலை வேண்டாம். உங்கள் பொருட்களை நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஞாபகம் மறதி கொஞ்சம் அதிகரிக்கும். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருங்கள்.
இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மாறிவிடும். உறவினர்களை தான் அனுசரித்து செல்வது நல்லது. வீன் வாக்குவாதங்களை தவிர்ப்பது மிக நல்லது . பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதல் உழைப்பு தேவை. சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது அவசியம். உழைப்பால் உயரும் நாள் என்று சொல்லலாம். கவனமாக இன்று பணிகளை மேற்கொண்டால் வெற்றி உங்கள் பக்கத்தில் இருக்கும்.
இன்று பெண்களுக்கு ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். நேரம் தவறாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். குலதெய்வ வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று மாணவர்கள் பெருந்தன்மையோடு நடந்து கொள்வீர்கள். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். உயர்கல்வியில் மிகுந்த ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நல்லதே நடக்கும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்றைய தினம் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்துவிட்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : மூன்று மற்றும் ஏழு
அதிஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் இளமஞ்சள் நிறம்
Super