மழை நீர் வடிகால் தூர்வாரும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை பார்வையிட்ட பிறகு பேசிய அவர், பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் ஒரு மாதத்தில் முடிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர்கள், எம்பிக்கள் அனைவரையும் களப்பணியாற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.