சாம்சங் நிறுவனம் தற்போது மியூசிக் ஃப்ரேமை அறிமுகப்படுத்தியுள்ளது. போட்டோ பிரேம்கள் போன்று சுவரில் தங்களின் மியூசிக் ஃப்ரேமை மாட்டி வைத்துக்கொள்ளலாம். அதில் உங்களுக்கு பிடித்த இசையை ரசிக்க முடியும் என நிறுவனம் கூறியுள்ளது. மேலும் சாம்சங் கொண்டுவந்துள்ள இந்த புதிதாக வடிவமைக்கப்பட்ட மியூசிக் ஃப்ரேம் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த வயர்லெஸ் மியூசிக் ஃப்ரேம் மூலம் நல்ல இசையைக் கேட்பது மட்டுமின்றி, தனிப்பட்ட புகைப்படங்கள், கலைப் படங்களையும் அதில் சேர்க்கலாம்.