நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2012-ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் நடிகர் விஜய் வாங்கியது முதல் வரி செலுத்தவில்லை என்று சர்ச்சையில் சிக்கியது. அதை தொடர்ந்து வைரலும் ஆகியது. இந்நிலையில், எம்பயர் ஆட்டோ என்கிற கார்களை விற்கும் நிறுவனம் மூலம் இந்தக் கார் ரூ.2.5 கோடி ஆரம்ப விலையுடன் விற்பனைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.